இலங்கை தேசிய அணியில் ஏறாவூர் வீரர் தில்ஹாம்

மியன்மாருடன் சர்வதேச நட்பு ரீதியிலான இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான இலங்கை உதைபந்தாட்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் நட்சத்திர வீரர் மொஹமட் தில்ஹாம் உள்வாங்கப்பட்டுள்ளார்.

பிபா தரப்படுத்தலில் இலங்கை அதிரடி முன்னேற்றம்

இலங்கை உதைபந்தாட்ட அணி பிபாவின் இரண்டு நட்பு ரீதியிலான போட்டிகளில்
விளையாடுவதற்காக மியன்மார் பயணமாகியுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 10ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 13ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

ஏற்கனவே கடந்த மாதம் இடம்பெற்ற AFC ஆசிய கிண்ண தொடருக்கான தகுதிகாண் (Play off) சுற்றில் கம்போடியா அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டிகளுக்கான இலங்கை அணியில் உபாதை காரணமாக உள்வாங்கப்படாத இளம் வீரர் டிலொன் டி சில்வா இந்த போட்டிக்கான இலங்கை அணியிலும் உள்வாங்கப்படவில்லை.

வெற்றியின்றி நாடு திரும்பும் இலங்கை 17 வயதின்கீழ் அணி

அதேபோன்று, கடந்த போட்டிகளில் விளையாடிய முக்கிய பின்கள வீரர்களான ஜேசன்
தயாபரன், ஜக் ஹிங்கர்ட் மற்றும் கிளோடியோ ஆகியோர் இந்த நட்பு ரீதியிலான
போட்டிகளுக்கான இலங்கை அணியில் உள்வாங்கப்படவில்லை. இவர்கள் ஏற்கனவே இந்த வருடம் இலங்கை அணி புருனே அணியுடன் விளையாடிய நட்பு ரீதியிலான போட்டிகளில் (காயம் காரணமாக) விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி வீரரான மொஹமட் தில்ஹாம் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமையினால், அவர் தேசிய அணியில் முதல் முறையாக இடம்பெறுகின்றார். இவர் ஏற்கனவே இலங்கை 20 வயதின்கீழ் அணியில் இடம்பெற்று அண்மைய தொடர்களில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை குழாம்

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *