உக்குவளை அஜ்மீரின் உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய பதிவு

மாத்தளை உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் 16 வயதின்கீழ், 18 வயதின்கீழ் மற்றும் 20 வயதின்கீழ் உதைபந்தாட்ட அணிகள் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.

இவ்வாறு தமது கல்லூரியின் அனைத்து அணிகளும் தேசிய மட்ட போட்டிகளுக்கு ஒரே
வருடத்தில் தெரிவாகியுள்ளமை உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் வரலாற்றில் முதல் முறை என்பது சிறப்பம்சமாகும்.

இலங்கை தேசிய அணியில் ஏறாவூர் வீரர் தில்ஹாம்

ஏற்கனவே இடம்பெற்ற மாத்தளை வலய மட்டப் போட்டிகளில் அஜ்மீர் தேசிய பாடசாலையின் 16 மற்றும் 18 வயதின்கீழ் அணிகள் சம்பியனாகியதுடம் 20 வயதின்கீழ் அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்றனர்.

அதன் பின்னர் இடம்பெற்ற மத்திய மாகாண மட்டப் போட்டிகளில் அஜ்மீர் தேசிய
பாடசாலையின் 16 வயதின்கீழ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப்
போட்டிகளுக்கு தெரிவாகியது. அவ்வணி இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரியிடம் தோல்வியடைந்திருந்தது.

அதேபோன்று, அஜ்மீர் தேசிய பாடசாலையின் 18 வயதின்கீழ் மற்றும் 20 வயதின்கீழ் அணிகள் மாகாண மட்டப் போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியது.

மத்திய மாகாணத்தில் 16 வயதின்கீழ் பிரிவில் கண்டி திரித்துவக் கல்லூரி அணி
சம்பியனாகியதுடன் கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

அதேபோன்று, 18 வயதின்கீழ் பிரிவில் கம்பளை ஸாஹிரா கல்லூரி சம்பியனாகியதுடன், மாத்தளை ஸாஹிரா கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகின.

வெற்றியின்றி நாடு திரும்பும் இலங்கை 17 வயதின்கீழ் அணி

மத்திய மாகாணத்தில் 20 வயின்கீழ் பிரிவில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி சம்பியனாகிய அதேவேளை, நுவரெலியா சென் சேவியர் கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்றது.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட உதைபந்தாட்ட
போட்டிகள் இம்மாதம் 11, 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனுராதபுரத்தில் இடம்பெறும்.

அஜ்மீர் தேசிய பாடசாலையின் உதைபந்தாட்ட அணிகளின் பயிற்றுவிப்பாளராக மொஹமட் நியாத் செயற்படும் அதேவேளை, விளையாட்டு பொறுப்பாசிரியராக மொஹமட் ஹனபி கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது

அஜ்மீர் தேசிய பாடசாலையின் 16 வயதின் கீழ் அணி


அஜ்மீர் தேசிய பாடசாலையின் 18 வயதின் கீழ் அணி


அஜ்மீர் தேசிய பாடசாலையின் 20 வயதின் கீழ் அணி

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *