முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை

புரூனே அணிக்கு எதிரான முதலாவது நட்பு ரீதியிலான போட்டியில் புரூனே வீரர்கள் இரண்டாம் பாதியில் பெற்ற கோலினால் இலங்கை உதைபந்தாட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

இரண்டு நட்பு ரீதியிலான போட்டிகளில் ஆடுவதற்கான இலங்கை உதைபந்தாட்ட அணி பரூனேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன் முதல் போட்டி சனிக்கிழமை (8) மாலை இடம்பெற்றது.

இலங்கை முதல் பதினொரவர்

இதில், காயம் காரணமாக இலங்கை அணியின் முக்கிய பின்கள வீரர்களான ஜேசன் தயாபரன், ஜாக் ஹிங்கர்ட் மற்றும் கிளாடியோ ஆகியோர் அணியில் உள்வாங்கப்படவில்லை. எனவே, அவர்களது இடங்களில் இளம் வீரர் ஜூட் சுமன், ஷலன சமீர மற்றும் மனரம் பெரேரா ஆகியோர் விளையாடினர்.

ஆட்டம் ஆரம்பித்தது முதல் இரண்டு அணிகளும் சம அளவிலான ஆட்டத்தையே காண்பித்தனர். எனினும், சொந்த மைதான வீரர்கள் இலங்கை அணியின் கோல் எல்லையில் சற்று அதிகமான நேரம் பந்தை வைத்திருந்தாலும் முதல் பாதி நிறைவடையும்வரை கோல்கள் எதனையும் பெறவில்லை.

எனினும், இரண்டாம் பாதியில் மைதானத்தின் மத்தியில் இருந்து சக வீரருக்கு பரிமாறிய பந்தை மீண்டும் பெற்று அதனை முன்னோக்கி எடுத்து வந்த புரூனே அணியின் தலைவர் மொஹமட் அப்ஹம் மின்ஹாஜி ரஹ்மான் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் போட்டி நிறைவு வரை எந்தவித மேலதிக கோலும் பெறப்படாமையினால் புரூனே அணியினர் 1-0 என வெற்றி பெற்றனர். முதல் போட்டியில தோல்வி கண்டுள்ள இலங்கை வீரர்கள் இந்த சுற்றுப் பயணத்தின் அடுத்த போட்டியில் எதிர்வரும் 11ஆம் திகதி விளையாடவுள்ளமை குறிப்படத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *