Lanka Football Cup கிண்ணம் கண்டி கால்பந்து கழகம் வசம்

Lanka Sports Group நிறுவனம் முதல் முறையாக ஏற்பாடு செய்த Lanka Football Cup உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கால்பந்து கழகத்தை 7-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்திய கண்டி கால்பந்து கழகம் தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டது.

தேசிய அணியில் அங்கம் வகிக்கும் அதிகமான வீரர்களைக் கொண்ட கண்டி கால்பந்து கழகம் இந்த தொடரின் முதல் போட்டியில் Negombo FC அணியை 9-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும், அரையிறுதியில் ஜப்னா கால்பந்து கழகத்தை 5-0 எனவும் இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.

இளையோருக்கான ”Y19” புதிய கால்பந்து தொடர்

இந்நிலையில் கொழும்பு சிடி லீக் கால்பந்து தொகுதியில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தொடரின் இறுதிப் போட்டி ஆரம்பித்த நிமிடம் முதலே கண்டி அணி வீரர்கள் போட்டியில் ஆக்கிரமிப்பு செலுத்தி அடுத்தடுத்து கொல்களைப் பதிவு செய்தனர்.

அதன்படி, முதல் பாதி ஆட்டம் நிறைவடையும்போது அவர்கள் ஐந்து கோல்களைப் பெற்றுக்கொண்டனர். அவ்வணியின் சர்பான் முதல் பாதியிலேயே தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

பின்னர் இடம்பெற்ற இரண்டாம் பாதியிலும் கண்டி கால்பந்து அணியினரின் ஆதிக்கமே ஓங்கியது. எனினும், அவர்களால் இரண்டாம் பாதியில் மேலதிகமாக இரண்டு கோல்களை மாத்திரமே பெற முடிந்தது. எனவே, போட்டி நிறைவில் கண்டி கால்பந்து கழக வீரர்கள் 7-0 என இலகுவாக வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தனர்.

எட்டு அணிகள் மோதும் Lanka Football Cup – Onfield

கண்டி அணிக்காக மொஹமட் சர்பான் 3 கோல்களையும், மதுஷான் டி சில்வா 2 கோல்களையும், தேஷான் துஷ்மிக்க மற்றும் சமீர மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தனர்.  

தொடரில் சம்பியனாகிய கண்டி கால்பந்து கழகத்திற்கு கிண்ணத்துடன் ஒரு மில்லியன் ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடம் பெற்ற கோல் கால்பந்து கழகத்திற்கு கிண்ணத்துடன் 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

முழு நேரம்: Galle FC 0 – 7 Kandy FC

விருதுகள்

இறுதிப் போட்டியின் நாயகன் – சர்பான் (Kandy FC)

தங்க பாதணி – மொஹமட் பசால் (Kandy FC)

தங்க கையுறை – ராசிக் ரிஷாட் (Kandy FC)

தொடரின் சிறந்த ஒழுக்கமுள்ள அணி – ஜப்னா கால்பந்து கழகம்

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *