எட்டு அணிகள் மோதும் Lanka Football Cup

Lanka Sports Group நிறுவனம் முதல் முறையாக ஏற்பாடு செய்து நடாத்தும் எட்டு அணிகள் பங்கேற்கும் Lanka Football Cup உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களை மையப்படுத்திய எட்டு அணிகள் இந்த போட்டித் தொடரில் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு அணிக்கும் தேசிய மட்டத்தில் பிரபல்யம் அடைந்த எட்டு பயிற்றுவிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி Colombo FC, Eastern FC, Central FC,Jaffna FC, Kalutara FC, Galle FC, Kandy FC மற்றும் Negombo FC ஆகிய எட்டு அணிகள் இம்முறை தொடரில் போட்டியிடவுள்ளன. போட்டிகள் நொக் அவுட் முறையில் இடம்பெறவுள்ளதுடன் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு சிடி லீக் கால்பந்து தொகுதியில் நடைபெறும்.

போட்டித் தொடரில் சம்பியனாகும் அணிக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *