எட்டு அணிகள் மோதும் Colombo-City Challenge Trophy 2024

கொழும்பு கால்பந்து லீக், சிடி கால்பந்து லீக் என்பன இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள Colombo-City Challenge Trophy 2024 தொடர் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


இந்த தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு மற்றும் அணிகளை குழுநிலைப்படுத்தும் நிகழ்வு என்பன செவ்வாய்க்கிழமை (16) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இலங்கை 17 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு


EXPO நிறுவனத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் இந்த தொடருக்கு கொழும்பு கால்பந்து லீக்கில் இருந்து 4 அணிகளும் சிடி கால்பந்து லீக்கில் இருந்து 4 அணிகளும் என மொத்தம் 8 அணிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.


அதன்படி, உள்வாங்கப்பட்ட அணிகளாக கொழும்பு லீக்கில் இருந்து நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம், செலஞ்சர்ஸ் கால்பந்து கழகம், ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் ரட்னம் விளையாட்டுக் கழகமும் சிடி கால்பந்து லீக்கில் இருந்து சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், ரினோன் விளையாட்டுக் கழகம் மற்றும் மாளிகாவத்தை யூத் விளையாட்டுக் கழகமும் உள்ளன.
நொக் அவுட் முறையில் இடம்பெறும் இந்த தொடரின் முதல் சுற்றான காலிறுதிகள் இரண்டு கட்டங்களாக (Two legs) இடம்பெறவுள்ளன. எனவே, காலிறுதியில் ஒவ்வொரு அணியும் தமது எதிரணியுடன் இரண்டு முறை மோதவுள்ளன.

யூரோ கிண்ணத்தை நான்காவது முறை வென்றது ஸ்பெயின்


தொடரில் ஒவ்வொரு அணியும் தமது குழாத்தில் 25 வீரர்களை பதிவுசெய்ய முடியும். மேலும், தற்போது தேசிய அணியின் பயிற்சி முகாமில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களையும் இந்த தொடரில் உள்ள எட்டு அணிகளும் உள்வாங்கும் வகையிலேயே தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தொடரில் சம்பியனாகும் அணிக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளதுடன் தொடரில் பங்கேற்கும் சகல அணிகளுக்கும் தலா 4 இலட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படவுள்ளன.

Photos


போட்டிகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்து இறுதிப் போட்டியை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாட்டுக்குழு திட்டமிட்டுள்ளது. தொடரின் போட்டிகள் அனைத்தும் சிடி கால்பந்து லீக் மைதானத்தில் இடம்பெறும்.

போட்டியின் முதல் சுற்றுப் போட்டிகள்

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *