திடீர் வலிப்புடன் விளையாடி வாழ்க்கையை மாற்றிய ரொனால்டோ

கடந்த 1998ஆம் இடம்பெற்ற பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியை யாரும் மறக்க முடியாது. பிரேசிலின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அந்த 21 வயது வீரரின் தோளில் சுமத்தப்பட்டது.

”கால்பந்து உலகின் அதிசயம்” என வர்ணிக்கப்பட்ட ரொனால்டோ நசாரியோ, தனது வாழ்வின் மிக முக்கியமான நாளை எதிர்நோக்கி இருந்தார். ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரமே இருந்தபோதுதான் அந்த சம்பவம் நேர்ந்தது.

திடீர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ரொனால்டோ, இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். இந்த செய்தியை அறிந்த ஒட்டுமொத்த உலகமும் திக்குமுக்காடி போனது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை

பயிற்சியாளர்கள், மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி, தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் இறுதிப் போட்டியில் களமிறங்கியே தீருவேன் என ஒற்றைக்காலில் நின்றார் ரொனால்டோ. கடைசி நிமிடத்தில் ரொனால்டோ போட்டியில் களமிறங்குவதும் உறுதியானது.

ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரொனால்டோவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால், பிரேசில் அணி பிரான்ஸிடம் கோப்பையை நழுவவிட்டது. எனினும், குறித்த உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வானார்.

யாரும் அறிந்திராத நுட்பங்கள், சிறந்த வீரர்களையும் திணறடிக்கும் அசத்திய திறமைகள் கொண்டிருந்த ரொனால்டோ, அன்றே தனக்கென புது பாணியை உருவாக்கிக்கொண்டார். ஸ்டிரைக்கர் என்று சொல்லப்படும் முன்கள ஆட்டக்காரருக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியவரும் ரொனால்டோ தான்.

எனினும், அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்கள் அவரை வாட்டின. 1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பலரும் எண்ணினர்.

கனவு கோப்பையே கையில் ஏந்துவதே வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்த ரொனால்டோ, தடைகளை உடைத்தெறிந்து மீண்டு வந்தார். கடந்த உலகக் கிண்ணத்தில் அடைந்த ஏமாற்றத்தை போக்க, 2002ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் அவர் புது உத்வேகத்துடன் களம் கண்டார்.

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் நடந்த குறித்த உலகக் கிண்ணத் தொடரில் பிரேசிலின் ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ கூட்டணி எதிரணிகளை கதி கலங்கவைத்தது.

Lanka Football Cup கிண்ணம் கண்டி கால்பந்து கழகம் வசம்

பங்கேற்ற அனைத்துப் போட்டிகளையும் இலகுவாக வென்ற பிரேசில் அணி, இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியையும் வீழ்த்தியது. அந்த போட்டியில் நட்சத்திரமாய் ஜொலித்த ரொனால்டோ நசாரியோ 2 கோல்கள் அடித்து பிரேசிலுக்கு 5வது உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்தார்.

தொடரின் சிறந்த வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என பல மகுடங்கள் ரொனால்டோவை நாமத்தை அலங்கரித்தன.

இன்றும் கால்பந்து உலகில் பல மாற்றங்களையும், பல கதைகளையும் ஏற்படுத்திய பெருமைக்குறிய பெயராகவே ரொனால்டோ நசாரியோ இருந்து வருகின்றார்.

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *