இலங்கை மகளிர் தேசிய அணியில் மகாஜனா வீராங்கனைகள் மூவர்

இந்த மாதம் நேபாளத்தில் ஆரம்பமாகவுள்ள SAFF மகளிர் சம்பியன்ஷிப் உதைபந்தாட்ட
தொடருக்கான இலங்கை மகளிர் குழாத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.

SAFF மகளிர் சம்பியன்ஷிப் தொடர் 2024இன் போட்டிகள் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நேபாளத்தின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான கத்மண்டுவில் உள்ள தசரத் அரங்கில் நடைபெறவுள்ளது.

உக்குவளை அஜ்மீரின் உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய பதிவு

இதற்கான இலங்கை குழாம் கடந்த சில வாரங்களாக கொழும்பில் வதிவிடப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொடருக்கான 23 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கையின் இறுதிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான ரூமி ஹஸனின் தலைமைப் பயிற்றுவிப்பின்கீழ் செயற்படும் இந்த அணியின் தலைவியாக தேசிய அணியில் அதிக அனுபவம் கொண்ட மத்தியகள வீராங்கனையான துஷானி மதுஷிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, இந்த அணி 3 கோல் காப்பாளர்கள், 8 பின்கள வீராங்கனைகள், 7 மத்தியகள வீராங்கனைகள் மற்றும் 5 முன்கள வீராங்கனைகளைக் கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த அணியில் யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரியில் பழைய மாணவிகளான ஷானு பாஸ்கரன், தர்மிகா சிவனேஸ்வரன் மற்றும் கௌரி சுரேந்திரன் ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது இந்த கல்லூரியின் வரலாற்றில் தேசிய அணிக்கு அதிக வீராங்கனைகளை அனுப்பிய முதல் முறையாகும்.

இலங்கை தேசிய அணியில் ஏறாவூர் வீரர் தில்ஹாம்

இம்முறை SAFF மகளிர் சம்பியன்ஷிப் தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி இந்தியா மற்றும்
பாகிஸ்தான் மகளிர் கால்பந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான மோதலுடன்
ஆரம்பமாகும்.

குழு B யில் இடம்பெற்றுள்ள இலங்கை ஒக்டோபர் 18 ஆம் திகதி மாலைதீவுக்கு எதிராக
போட்டியில் களமிறங்கும். தொடர்ந்து ஒக்டோபர் 21ஆம் திகதி பூட்டானை எதிர்கொள்ளும்

இலங்கை மகளிர் ஒக்டோபர் 24ஆம் திகதி போட்டித்தொடரை நடத்தும் நேபாளத்திற்கு எதிராக தமது இறுதி குழு நிலை போட்டியில் ஆடுவர்.

நடப்பு சம்பியனான பங்களாதேஷ், தெற்காசிய பிராந்தியத்தில் பலம் வாய்ந்த அணியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் தொடரில் A குழுவில் இடம் பெற்றுள்ளன.

தேசியமட்ட பளுதூக்குதலில் தங்கம், வெள்ளி வென்ற மகாஜனா

இம்முறை SAFF மகளிர் சம்பியன்ஷிப் தொடர் குறித்த அனைத்து தகவல்களையும் எமது onfield.lk இணையத்தளம் மற்றும் Onfield Women பேஸ்புக் பக்கங்களினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

இலங்கை மகளிர் குழாம்

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *