இளையோருக்கான ”Y19” புதிய கால்பந்து தொடர்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம், இளையோரின் கால்பந்து அபிவிருத்தியை இலக்காக கொண்டு 19 வயதின்கீழ் வீரர்களுக்கான புதிய தொடர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.  

”Y19” என்ற நாமத்துடன் (Youth Nineteen) இடம்பெறவுள்ள இந்த முதலாவது தேசிய மட்ட இளையோருக்கான லீக் போட்டித் தொடருக்கு உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்ற Lyca வின் ஞானம் அறக்கட்டளை (Gnanam Foundation) பூரண அனுசரணை வழங்குகின்றது.   

இலங்கையின் 55 நகரங்களில் உள்ள 440 அணிகள் மோதவுள்ள இந்த தொடரில் சுமார் 11,000 வீரர்கள், 2,500 கழக அதிகாரிகள் மற்றும் 1,000 பயிற்றுவிப்பாளர்களும் நடுவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

தொடரின் முதல் கட்டமாக, 55 லீக்களில் போட்டிகள் இடம்பெறும். ஒவ்வொரு லீக்களிலும் தலா 8 அணிகள் முதல் கட்டமாக மோதும். பின்னர் லீக் மட்ட போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் வீரர்களை வைத்து மாவட்ட அணியொன்று தெரிவு செய்யப்படும். தொடர்ந்து, 24 மாவட்ட அணிகள் தொடரின் இறுதிக் கட்டப் போட்டிகளில் மோதும்.

இந்த தொடரை அறிமுகம் செய்யவும் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தவும் திங்கட்கிழமை (27) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், Lyca நிறுவனத்தின் உரிமையாளர் அல்லிராஜா சுபாஷ்கரன், ஞானம் அறக்கட்டளையின் அதிகாரிகள், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

SRI LANKA VS PAPUA NEW GUINEA L FIFA SERIES 2024

அங்கு கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், ”இலங்கையின் கால்பந்தில் சிறந்த இளம் வீரர்களை அடையாளம் காண்பதற்கும், அதன்மூலம் ஏற்கனவே ஒரு வளர்ச்சிப் பாதையில் தனது பயணத்தை ஆரம்பித்தள்ள இலங்கை கால்பந்து அணியின் எதிர்காலத்திற்கு சிறந்த வீரர்களை வழங்கவும் இந்த தொடர் உதவும்” என்று குறிப்பிட்டார்.

தேசிய மட்டத்தில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த தொடரை ஜூலை மாதமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *